Skip to main content

கட்காரியை சந்திப்பதில் என்ன பயன்? மோடிக்கு கர்நாடக தேர்தல்தான் முதன்மையாக தெரிகிறது: தமிமுன் அன்சாரி கண்டனம்

Published on 03/03/2018 | Edited on 03/03/2018


 

மோடிக்கு கர்நாடக மாநில தேர்தல் பிரச்சனைத்தான் முதன்மையாக தெரிகிறது என்று நாகை எம்எல்ஏவும், மஜகவின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்க பிரதமர் நேரம் ஒதுக்காதது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் சந்தித்து பேசினர். 
 

இதுதொடர்பாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் குறித்தும் நக்கீரன் இணையதளத்திடம் பேசிய தமிமுன் அன்சாரி, 

modi


 

காவிரிக்காக பிரதமரை சந்திப்பது குறித்து முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் சந்தித்துக்கொண்டதை பாராட்டுகிறேன். இந்த ஆரோக்கியமான அரசியல் போக்கு தொடர வேண்டும். 
 


முதல்வரை சந்தித்த பிறகு அண்ணன் ஜெயக்குமார், அண்ணன் ஸ்டாலின் ஆகியோர் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டிருப்பது குழப்பமாக இருந்தாலும் ஒரு விசயம் இருவரின் கருத்துக்களில் இருந்து புரிகிறது. அதாவது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாட்டு குழுவை சந்திக்க பிரதமர் மோடி விருப்பவில்லை என்பது தெளிவாகிறது. 
 

முதலில் நிதின்கட்கரியை சந்திக்குமாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக ஜெயக்குமார் கூறியிருக்கிறார். கடந்த வாரம் தமிழ்நாட்டிற்கு வந்திருந்தபோது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழ்நாட்டுக்கு எதிரான கருத்தை நிதின் கட்கரி கூறி சென்றிருக்கிறார். அப்படிப்பட்டவரை சந்திப்பதில் என்ன பயன் இருக்கிறது?  

 

jayakumar THAMIMUN ANSARI


மொத்தத்தில் மத்திய பாஜக அரசும், பிரதமர் மோடியும் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் அவமதிக்கிறார்கள் என்பது தெளிவாகியிருக்கிறது. மோடிக்கு கர்நாடக மாநில தேர்தல் பிரச்சனைத்தான் முதன்மையாக தெரிகிறது. அவருக்கு தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லை. தமிழ்நாட்டின் காவிரி விவசாயிகள் மீதும் அக்கறை இல்லை.


 முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த விசயத்தில் சமரசம் இல்லாமல் செயல்படுவார் என்று நம்பிக்கை இருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றம் கூடயிருக்கும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். அதன் பிறகும் மோடி சந்திக்க மறுப்பாரேனால், மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆராய வேண்டும். இவ்வாறு நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டியின் போது  கூறினார்.

சார்ந்த செய்திகள்