Skip to main content

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 93,000 கனஅடியாக உயர்வு!

Published on 11/08/2019 | Edited on 11/08/2019

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 35,000 கனஅடியில் இருந்து 93,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67.40 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 30.50 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் சுமார் 10 அடி உயர்ந்துள்ளது. 

 

 

karnataka govt dam water release raised heavy rain falls mettur dam raised





கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் முக்கிய அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 2.50 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மேட்டுர் மற்றும் ஒகேனக்கல்லில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. 




 

சார்ந்த செய்திகள்