Skip to main content

தொட்டாலே உதிரும் கட்டடம் - கமல் காட்டம்!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021
க


சென்னையில் புளியதோப்பில் புதிதாக கட்டப்பட்ட அரசு குடியிருப்பில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்த கட்டிடம் தரமாக கட்டவில்லை என்று அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக தொலைக்காட்சிகளில் இன்று செய்தி வெளியாகி இருந்தது.

 

இதற்கிடையே இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், " புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் எழுதிய செலவுக் கணக்கு சுமார் 15 லட்சம். 1000 ரூபாய் எலெக்ட்ரிக் ஷேவருக்குக் கூட ஓராண்டு கேரண்டி உண்டு. இதைக் கட்டிய ஒப்பந்தக்காரரை உடனடியாக விசாரிக்கவேண்டும். மொத்த கட்டிடத்தையும் இடித்துவிட்டு  அதே ஒப்பந்தக்காரரின் பணத்தில் புதிதாக கட்ட வைக்க வேண்டும். அரசு இக்கட்டிடத்தின் உறுதியை நேரடியாக கண்காணிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்