Skip to main content

கஜா புயல் பாதிப்பு; 1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
tn

 

 

கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு 1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

 

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இன்னும் பல கிராமங்கள் மீளமுடியாத நிலையில் பெரும்துயரை சந்தித்து வருகிறது. கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளால் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கஜா புயல் பாதிப்பால் 46 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரண பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. 

 

குறிப்பாக நாகை மற்றும் வேதாரண்யத்தில் அதன் பாதிப்பும் அதிகமாக உள்ளதால் அதிகமாக சேதமடைந்த பகுதிகளுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு நிவாரண நடவடிக்கை  எடுக்க தமிழக அரசு முடிவெடுத்து பணிகளை தொடங்கியுள்ளது.


இந்நிலையில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய தமிழக அரசு 1000 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த 1000 கோடியும் துறை மற்றும் பாதிப்புக்கள் வாரியாக பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.

 

மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புக்கு 205 கோடியும், சேதமடைந்த வீடுகளுக்கு 100 கோடியும், பயிர் சேதம் உட்பட விவசாயப் பணிகளுக்கு 350 கோடியும், மின்துறை பராமரிப்புக்கு 200 கோடியும், மீன்வளத்துறைக்கு 41.63 கோடியும், புயல் பாதித்த மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர் நிதிக்கு 27 கோடியும், உள்ளாட்சித்துறைக்கு 25 கோடியும், டவுன் பஞ்சயாத்து நிவாரண பணிகளுக்கு 5 கோடி என மொத்தம் 1000 கோடி பகிர்ந்தளிக்கபட்டுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்