Skip to main content

செட்டிநாடு குழுமத்தில் ஐ.டி ரெய்டு... 7 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்!    

Published on 09/12/2020 | Edited on 09/12/2020

 

it raid

 

செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்ற நிலையில், கணக்கில் காட்டப்படாத 7 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

 

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில், சென்னை, கரூர், கோவை, காஞ்சிபுரம், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சோதனை இன்று (09/12/2020) காலை 08.00 மணி முதல் நடைபெற்று வருகிறது. சோதனையில், சுமார் 100 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர்.

 

it raid

 

செட்டிநாடு குழுமமானது சிமெண்ட் உற்பத்தி, மின் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி நிலையங்கள், மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிற நிலையில், இந்தச் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 7 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. செட்டிநாடு குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

 

it raid

 

செட்டிநாடு குழுமம் மட்டுமல்லாது, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் 60 -க்கும் மேற்பட்ட  இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்