
கள்ளக்குறிச்சியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சிறுபனைதக்கா கிராமத்தில் வசிப்பவர் ஜான். அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆறுமுகம். ஆறுமுகத்தின் அப்பா வேட்டையாடுவதற்காக லைசென்ஸ் உடன் நாட்டுத் துப்பாக்கி வைத்திருக்கும் நிலையில், ஆறுமுகம் துப்பாக்கியை எடுத்து பக்கத்து வீட்டில் இருந்த ஜானை சுட்டுள்ளார். சம்பவ இடத்திலேயே ஜான் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆறுமுகம் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம், சென்னையில் ஜீவனாம்சம் தகராறு தொடர்பாக மருமகளே கணவர், மாமியார், மாமனார் உள்பட 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியில் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.