Skip to main content

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழரை விடுதலை செய்ய தமிழக ஆளுநர் விரைந்து உத்தரவிட வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018

 

thiruma

 

 

புதுச்சேரி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனியார் விடுதியில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கும் 7 பேரையும் உடனடியாக  விடுதலை செய்ய தமிழக ஆளுநர் அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் கூறியது அதனடிப்படையில் தமிழக அரசு அமைச்சரவை வலியுறுத்தி ஆளுநருக்கு அனுப்பியது.  தமிழக ஆளுநர் விரைந்து ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். மேலும் ஆளுநர் 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறோம். 

 

வங்கி மோசடியில்  ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் விஜய் மல்லையா, நிரவ் மோடி உட்பட பலரும்  அடங்குவர். பல கோடிக்கணக்கான ரூபாய்கள் பணம் கொள்ளை அடித்து உள்ளனர். கொள்ளையடித்துவிட்டு  அவர்கள் தலைமறைவாகி உள்ளனர். விவசாயிகளின் கடனை வசூல் செய்வதாக கூறி, அவர்கள் மீது மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.  

 

மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ள நிலையில், பிரதமர் மோடி அவர்கள் மூலம்  12 கோடி வாராக்கடன்களுக்கு முழு பொறுப்பு ஏற்று  பிரதமர் நரேந்திரமோடி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும்.

 

புதுச்சேரியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட  மருத்துவ மாணவர்கள் கல்வி கட்டணத்தை முழுவதும் புதுச்சேரி அரசு செலுத்த வேண்டும். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக உளவுத்துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ரவிக்குமாருக்கு போலீஸ்  பாதுகாப்பு அளித்துள்ளதற்கு முதல்வர் நாராயணசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என  திருமாவளவன் கூறினார்.

சார்ந்த செய்திகள்