கடலூர் முதுநகரில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். காரை சோதனை செய்த போது காரிலிருந்த கணக்கில் வராத ரூபாய் 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் அருகே உள்ள செல்லங்குப்பத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சிவா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், ஏட்டுகள் பத்மநாபன், தரணிதரன், சம்பத்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரை சோதனை செய்த போது காரிலிருந்த கணக்கில் வராத ரூபாய் 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

Vehicle testing

காரில் வந்த அதன் உரிமையாளர் காட்டுமன்னார்கோவில் ஓமாம்புலியூர் ரோட்டை சேர்ந்த ஒப்பந்ததாரர் கே.எஸ்.கே. வேல்முருகன் (வயது 38), மற்றும் கார் டிரைவர் காட்டுமன்னார் கோவில் அருகே திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன் வெற்றிவேல் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

Advertisment

பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தேர்தல் பறக்கும் படையினர், குறிஞ்சிப்பாடி தாசில்தார் உதயகுமாரிடம் ஒப்படைத்தனர்.