Skip to main content

சாராய கும்பலை சுற்றிவளைத்த போலீஸ் - மூன்று பேர் தப்பி ஓட்டம்!

Published on 01/07/2022 | Edited on 01/07/2022

 

The gang surrounded the liquor gang.... three people fled!

 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தமிழக-ஆந்திரா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது. இது தொடர்பாக இரு மாநில போலீசாருக்கு தகவல் சென்றாலும் பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை. வாணியம்பாடி மதுவிலக்கு பிரிவு காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சிலமுறை ரெய்டு சென்றாலும் முன்கூட்டியே தகவல் தெரிந்து தப்பிவிடுவது வழக்கம்.

 

இதுகுறித்து வேலூர் மண்டல மத்திய புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் ஜீலை 1 ஆம் தேதி அதிரடியாக அப்பகுதிக்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்குத் தயாராக இருந்த 4000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் மூன்று அடுப்புகள், 200 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்துவதற்கு தயார் நிலையில் வைத்திருந்த கேன்களை பறிமுதல் செய்தனர்.

 

போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து மூவர் தப்பி ஓடுவதை போலீசார் பார்த்துள்ளனர். அவர்களை பிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. சாராயம் காய்ச்சுகிறார்கள் எனத்தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர் வாணியம்பாடி மக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்