Skip to main content

ஆதரவற்றோர்களுக்கு உணவு, 'மாஸ்க்' வழங்கி அசத்திய காவல்துறையினர்!

Published on 27/03/2020 | Edited on 27/03/2020

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் ஆதரவற்றோர்களுக்கு காவல்துறையினர் தங்களின் சொந்த செலவில் உணவுகளை வழங்கி வருகின்றனர். 
 

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டம் நாகூர் தர்கா பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. ஆனால், தர்கா அருகே சாலையோரங்களில் தங்கியிருந்த ஆதரவற்ற முதியவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் உணவு இல்லமால் தவித்தனர். இதனை அறிந்த நாகூர் காவல்துறையினர், அங்கிருந்த 50- க்கும் மேற்பட்டவர்களுக்கு இரவு உணவு வழங்கினர். அதற்கு முன்னதாக, அவர்களை சோப்பால் கைகழுவ சொல்லியும், இலவசமாக 'மாஸ்க்' கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

food and mask provide police nagore

"நாகூரை போலவே நாகையில் பல்வேறு பகுதிகளில் ஆதரவற்று சாலையோரங்களில் தங்கி இருக்கும் ஆதரவற்றவர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிடம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

சார்ந்த செய்திகள்