Skip to main content

புதுமைகள் செய்துவரும் இளம் எஸ்.பி... மக்கள் பாராட்டு...

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

ஈரோடு மாவட்டத்திற்கு காவல்துறை  எஸ்.பி.யாக சக்திகணேசன் பொறுப்பேற்ற இந்த ஒரு வருடத்தில் போலீஸ் பணிகளை கடந்து பொது மக்களுக்கான நற்செயல்களிலும் போலீசாரை ஈடுபடுத்தி வருகிறார். இது பொதுமக்கள் பலரது மத்தியிலும் பாராட்டை பெற்று வருகிறது. 

 

erode sp sakthi ganesan plans for people

 

 

வயதானவர்கள், பெற்றெடுத்த வாரிசுகளால் தனித்து விடப்பட்டவர்கள், கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுபவர்கள் நேரிடையாக காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டியதில்லை. ஒரு போன் செய்தால் போதும். "ஹலோசீனியர்ஸ்" என்ற இந்த திட்டத்தின்படி, அவர்கள் இருக்கும் இடத்திற்கே போலீஸ் சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பார்கள்.

அடுத்து அவர் அறிவித்த திட்டம்  "லேடீஸ் ஃபஸ்ட்" இதில் ஏதாவது வகையில் பாதிக்கப்படும் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை ஒரு போன் செய்தால் போதும், மகளிர் போலீசார் அவர்கள் இருப்பிடத்திற்கு நேரில் சென்று தீர்வு காண்பதோடு பெண்கள் பிரச்சனையில் ரகசியமும் காக்கப்பட்டு வருகிறது. 

இதனை தொடர்ந்து "எக்ஸ்பிரஸ் ஃபிரி வே" இது 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை கொண்டு வரும் போது விரைவாக மருத்துவமனை செல்ல அவ்வழியில் உள்ள  ட்ராபிக் போலீசாருக்கு தகவல் அனுப்பி சாலையில் ட்ராபிக் ஏற்படாமல் வைத்திருப்பது.

இப்போது மற்றொரு புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளார் எஸ்.பி. சக்தி கணேசன். அது "அர்பணிப்பு பீட்".

பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் நல்லுறவினை மேம்படுத்தும் வகையில் அர்ப்பணிப்பு போலீஸ் பீட் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பீட்டிற்கு பிரிக்கப்பட்டுள்ள போலீசாருக்கு இன்று ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் அவர்களுக்கு உண்டான பயிற்சி, பணிகள் குறித்தும் எஸ்பி சக்திகணேசன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறும்போது, "ஈரோடு மாவட்ட காவல் துறையில்  கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, பவானி, ஈரோடு என ஐந்து சப் டிவிசன்கள் உள்ளது.

இந்த ஐந்து சப்டிவிசன்களில் அர்ப்பணிப்பு அதாவது "டெடிகேட்" என்கிற போலீஸ் பீட் இன்று முதல் துவங்கப்பட்டுள்ளது. இதில், ஒவ்வொரு காவல்  நிலையத்துக்கும்  3 போலீசார் என மொத்தம் 54 பேர் ஒதுக்கீடு செய்துள்ளேன். அவர்கள் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு எல்லைக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பிரச்னை, சாலை வசதி முதல் குடிநீர் பிரச்சனை வரை அதற்கான  உண்டான தீர்வு என்ன என்பதையும் மக்களிடம் எடுத்து சொல்வார். மேலும், அந்த பகுதிகளில் உள்ள பழைய குற்றவாளிகள் யார்? அவர்கள் மூலம் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதா? மக்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள் உள்ளார்களா என்பதை முன்பே அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த போலீசார் மக்களிடம் உறவு போல் நெருங்கி பழகி, அவர்களுக்கு நன்கு தெரிந்த நண்பர் போல இருக்க வேண்டும். இதனால், போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இனக்கமான நல்லுறவு மேம்படும், குற்றச்சம்பவங்கள் வெகுவாக குறையும் என நம்புகிறோம்." என்றார் புதுமைகளை தொடர்ந்து செய்து வருகிறார் இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான சக்தி கணேசன்

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

அமைச்சர்கள், துணைவேந்தர்களை சி.பி.ஐ. விசாரனை செய்ய வேண்டும்: ராமதாஸ் பேட்டி

Published on 12/02/2018 | Edited on 12/02/2018
ramadas interview

ஈரோடு மாவட்ட பாமக., பொதுக்குழு கூட்டம் இன்று ஈரோட்டில்  நடந்தது. அதில் கலந்து கொள்ள வந்த பாமக., நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

 அப்போது அவர்  "சட்டசபையில் காந்தி, அம்பேத்கார், பெரியார்,ராஜாஜி, திருவள்ளுவர்,அண்ணா, காமராஜ், எம்ஜிஆர் உள்ளிட்ட 10 பேர் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில், எம்ஜிஆர்., படம் மட்டும் ஜெயலிலதாவால் திறக்கப்பட்டது. மற்ற  படங்கள் வெளிமாநில ஆளுனர்களால் திறக்கப்பட்டது. குற்றவாளியான ஜெ., படம்   சட்டசபையில் வைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினோம்.  ஆனாலும், இன்று ஜெயலலிதா படம்  திறக்கப்பட்டுள்ளது.  எதிர்கட்சிகள் சொன்னாலும் அந்தப்படம் எடுக்கப்போவது கிடையாது.  இது குறித்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

ஓட்டு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மட்டுமல்ல. அவர்கள் கட்சியையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் சீர் திருத்தம் செய்ய ஆணையம் முன் வர வேண்டும். 

 

கோவை பாரதியார்  பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக துணை வேந்தர்கள் மட்டுமல்ல சம்பந்தப்பட்ட  அமைச்சர்களிடம்  சிபிஐ.,மூலம் விசாரனை செய்யப்படவேண்டும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணியை மத்திய அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.  கியாஸ் டேங்கர் லாரி ஸ்டிரைக்கால் கியாஸ் தட்டுபாடு ஏற்படும் அபாயம் உள்ளது.  ஸ்டிரைக் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

 

அதிமுக., திமுக., ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் கட்சிகள். அந்த இரண்டு கட்சிகளுடன் பா.ம.க. இனி  கூட்டணி வைக்ககாது," என்றார்.

 

பேட்டியின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும் உடன் இருந்தார்.

- ஜீவாதங்கவேல்