Published on 31/01/2021 | Edited on 31/01/2021

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டிக்க தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 28 வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் தியேட்டர்களில் நாளை முதல் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இளங்கலை, முதுநிலை படிக்கும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.