Skip to main content

“என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் அறநெறி ஆசானாகவும் இருந்தவர்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

DMK Former General Secretary memorial day MK Stalin

 

திமுக முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, தூத்துக்குடியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

 

மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிடக் கொள்கையே உயிரெனக் கொண்டவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில், முத்தமிழறிஞர் கலைஞரின் உற்ற தோழராய் இருந்து இயக்கம் காத்தவர். என் பொதுவாழ்வுப் பயணத்தில் அரணாகவும் அறநெறி ஆசானாகவும் இருந்தவர். தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனில்லை என்பதை ஒவ்வொரு மேடையிலும் உரக்க முழங்கியவர். தமிழ்நாட்டின் உயர்வுக்கான அரசியல் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை உறுதிபட உரைத்தவர். அதற்காக ஓயாமல் உழைத்தவர்.

 

திராவிடக் கருத்தியலைப் பயிற்றுவித்து, இளைய தலைமுறையினருக்குக் கொள்கை உரம் ஊட்டியவர். கழகத்தின் பொதுச் செயலாளராக ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் அயராது செயலாற்றிய இனமானப் பேராசிரியரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்தி, அவர் காட்டிய சுயமரியாதைமிக்க இலட்சியப் பாதையில் திராவிட மாடல் அரசு பயணிக்கும் என உறுதியேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்