Skip to main content

சக கவுன்சிலர் மீது தாக்குதல்; படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி!

Published on 29/09/2023 | Edited on 29/09/2023

 

DMK councillor beat councillor in Vellore

 

வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 24 வது வார்டு திமுக கவுன்சிலர் சுதாகர், இவர் நேற்று இரவு (28.09.2023) வேலூர் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் ஹோட்டலில் இருந்த போது 30 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் முருகன் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் சென்று கவுன்சிலர் சுதாகரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சுதாகர் அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் இது தொடர்பாக விசாரித்த போது 24 ஆவது வார்டு சுதாகர் என்பவரின் நண்பர் சரவணன், 30 ஆவது வார்டு கவுன்சிலர் முருகன் என்பவரின் நண்பரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாகவும், இதற்கான வட்டி தொகையை சரவணன் 4 மாதங்களாக செலுத்தாததாகவும், இதனால் முருகன் தரப்பு பணம் வாங்கிய சரவணன் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டதாகவும், இது தொடர்பாக சரவணன் 24 ஆவது வார்டு கவுன்சிலர் சுதாகரிடம் தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக முதலில் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், இரண்டு கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து தனியார் ஹோட்டலில் இருந்த கவுன்சிலர் சுதாகரை சக கவுன்சிலர் முருகனின் ஆட்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

 

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

சேறும், சகதியுமான சாலை; சீரமைக்க வலியுறுத்தி நாற்று நட்டு போராட்டம்

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

People struggle to repair the mud and muddy road

 

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48வது வார்டு சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர், கே.கே. நகர், பனந்தோப்பு ஆகிய பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மாநகரில் உள்ள இந்த குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்கு, சாலை வசதி, மழைநீா் வடிகால் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், இதுதொடா்பாக பலமுறை வார்டு கவுன்சிலர்களுக்கும், மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையருக்கும் இப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் அவர்கள் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.

 

இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையால் குடியிருப்புக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் சேறும் சகதியுமாகவும், குண்டும் குழியுமாகவும் மாறி ஆங்காங்கே குளம் போல் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதும், நடந்து செல்லும் பலரும் சாலையில் வழுக்கி விழுந்து காயமடைவதும் எனத் தொடர்கதையாக ஆகிறது.

 

இதனால், ஆத்திரமடைந்த இப்பகுதி பெண்கள், ஆண்கள் என 30க்கும் மேற்பட்டவர்கள் முக்கிய சாலையில் சேறும் சகதியுமான இடத்தில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விரைந்து சாலை அமைத்துத் தரும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

 

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின்  பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

 

 'Is this social justice?'- Ramadoss asked

 

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்?  அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

 

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

 

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்