Skip to main content

தனியார் வங்கியில் தொழில்கடன் வாங்கி மோசடி- தம்பதி கைது

Published on 14/04/2023 | Edited on 14/04/2023

 

Couple arrested for business loan fraud in private bank

 

வேலூரில் தனியார் வங்கியில் தொழில் கடன் வாங்கி மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

வேலூர் மாவட்டம் காட்பாடி சேர்ந்தவர் 51 வயதான ரவிச்சந்திரன். அவரது மனைவி 50 வயதான பேபி. ரவிச்சந்திரன் காய் டெக் என்ற நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். காட்பாடி வள்ளிமலை சாலையில் உள்ள கனரா வங்கியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது பெயரில் உள்ள சொத்து ஆவணத்தைக் கொடுத்து (சூரிட்டி) பிரிண்டிங் மெஷின் வாங்க ரவிச்சந்திரன் 10 லட்சமும், தொழில் மூலதன கடனாக பேபி 7 லட்சமும் என இருவரும் சேர்ந்து மொத்தம் 17 லட்சத்தை கடனாக பெற்றுள்ளனர்.

 

இந்நிலையில் இவர்கள் கடனை செலுத்தாததால் இதுவரை வட்டியுடன் சேர்த்து 37 லட்சம் நிலுவையில் இருந்துள்ளது. வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் வீடுடன் கூடிய சொத்தை 19 லட்சத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏலம் விட்டுள்ளனர். அதனை காதர் அலி என்பவர் ஏலம் எடுத்துள்ளார். அதில் சொத்து ரவிச்சந்திரன் பெயரில் இல்லாமல் அவரது தாயார் பெயரில் இருப்பதும், பழைய ஆவணத்தை வைத்து முறைகேடாக வங்கி கடன் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து கனரா வங்கி மண்டல மேலாளர் மாதவராவ், வேலூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் வங்கி மோசடி செய்த ரவிச்சந்திரன், பேபி தம்பதியினரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணைக்கு பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்