Skip to main content

தலைமையாசிரியர் தலைமையில் நடைபெற்ற கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Corona Awareness Program led by the HEADMASTER

 

விழுப்புரம் கல்வி மாவட்டம், முட்டத்தூர் ஒய்க்காப் மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் Y. ஜாக்குலின் ஆசனாத் தலைமையில் கரோனா விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும், ஜூனியர் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கு முகக்கவசம், விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்குதல் நடைபெற்றது. இதில் பள்ளி ஆய்விற்காக வருகை தந்த விக்கிரவாண்டி வட்டாரக் கல்வி அலுவலர் N. தேன்மொழி கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி முகக்கவசங்களை வழங்கினார்.

 

மேலும், இதில் ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்டக் கன்வீனர் முனைவர் ம. பாபு செல்வதுரை, பள்ளி சூழ்நிலையில் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாக்கும் வழிமுறைகள் சார்ந்த தகவல்களை விளக்கினார். இதில் பள்ளி உதவி தலைமையாசிரியர்கள் ஐ. பியூலா சித்ரா பால், D. ஜேக்கப் ஜீவானந்தம், முதுகலை தமிழாசிரியை P. ஜெயசெல்வி, நாட்டு நலப்பணிதிட்ட ஒருங்கிணைப்பாளர் S. டேவிட் சார்லஸ், உடற்கல்வி ஆசிரியர் K. செல்வக்குமார் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் D. பிரேம் ராஜ்குமார், R. கிளமண்ட், V. வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்