Northindian State passed away due to electric shock

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் சானோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அச்சம்ரோங்மெய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் மப்பேடுமேட்டுச்சேரி கிராமத்தில் சரவணன் என்பவர் வீட்டில் தங்கியிருந்த வடமாநில இளைஞர்களுடன் தங்குவதற்காக சென்றுள்ளார்.

Advertisment

அப்போது அங்கு உள்ள வீட்டின்மொட்டை மாடியில் செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். மாடியின் அருகே சென்ற மின் ஒயரை கவனிக்காமல் அருகே சென்றதால் அச்சம்ரோங்மெய் கழுத்தில் மின் ஒயர் பட்டதால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

Advertisment

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குவிரைந்து வந்தமப்பேடு போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.