Published on 13/02/2019 | Edited on 13/02/2019

கடந்த ஒரு வாரமாக உடுமலை பகுதியில் சுற்றிவரும் சின்னத்தம்பி யானையை பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சின்னத்தம்பி யானை மக்களுடன் பழகி வருவதால் அதை வனக்காவலர்கள் பிடித்து முகாமில் வைக்கலாம் என்றும், அதை நிரந்தரமாக முகாமில் வைப்பதா அல்லது காட்டிற்குள் அனுப்பலாமா என்ற முடிவை, ஓரிரு வாரங்கள் அந்த யானையின் நடவடிக்கைகளை கண்காணித்தபின்பு தலைமை வனக்காவலர் எடுக்கலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது. யானையை பிடிக்கும் போது அதை துன்புறுத்தக்கூடாது, காயப்படுத்தக்கூடாது எனக்கூறிய நீதிமன்றம் வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.