கரோனா தடுப்பு பணிகள் குறித்து 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டுள்ளார். அதேபோல ஆலோசனைக் கூட்டத்தில் பேரிடர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.
நிதி தொடர்பான கோரிக்கையும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்வைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே 5 முறை இது போன்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்ற நிலையில், தற்பொழுது இன்றும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.