Skip to main content

எகிறிய காற்று மாசு; சவுகார்பேட்டை முதலிடம்

Published on 25/10/2022 | Edited on 25/10/2022

 

chennai air pollution... Chaukarpet tops..

 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போதும் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் காற்று மாசு என்பது அதிகரிக்கும். இந்நிலையில் சென்னையில் நேற்று மிக மோசமான அளவில் காற்று மாசு ஏற்பட்டதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

 

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை சென்னையில் மிக மோசமான அளவில் மாசு ஏற்பட்டுள்ளது. சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 345 லிருந்து 786 வரை என்ற அளவில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்கள் பெருமளவில் பட்டாசு, வாண வெடிகள் வெடித்ததால் காற்றில் காணப்பட்ட அதிகமான ஈரத்தன்மையும் மற்றும் காற்றின் மிகக் குறைந்த வேகமும் காற்று மாசு அதிகரிப்பிற்கு காரணமானது என தமிழ்நாடு ‘மாசு கட்டுப்பாட்டு வாரியம்’ அறிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் சவுகார்பேட்டையில் காற்றின் தரக்குறியீடு 786 ஆகவும், குறைந்தபட்சமாக பெசன்ட் நகரில் காற்றின் தரக்குறியீடு 345 ஆகவும் பதிவாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்