Skip to main content

செங்கல்பட்டு கொலை சம்பவம்... இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது ஏன்? 

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

Chengalpattu incident .. Why were the two encountered?

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு பேர் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையில் தொடர்புடைய இருவர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள காவல் நிலையம் அருகே நேற்று அப்பு கார்த்திக் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, மர்மநபர்கள் அவர் மீது பெட்ரோல் குண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேட்டுத்தெருவில் வசித்து வரும் மகேஷ் என்பவரது வீட்டிற்குள் நுழைந்த மர்மநபர்கள், அவரையும் வெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பித்துச் சென்றனர்.  

 

சம்பவ இடத்திற்கு விரைந்த செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்பவம் நடந்த பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திரமேரூர் திருப்புலிவனம் பகுதியில் பதுங்கி இருந்த மாதவன், மொய்தீன், தினேஷ், ஜெசிகா உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியான நிலையில் அதில் தினேஷ், மொய்தீன் என்கவுண்ட்டர்  செய்யப்பட்டதாக பின்னர் தகவல் வெளியாகியது.

 

Chengalpattu incident .. Why were the two encountered?

 

என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடிகள் தினேஷ் மற்றும் மொய்தீன் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. மொய்தீன் மீது 3 கொலை வழக்குகளும், தினேஷ் மீது ஒரு கொலை வழக்கும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடந்த கொலை தொடர்பாக அவர்களைப் பிடிக்க சுற்றிவளைத்த பொழுது இருவரும் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் போலீசார் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக செங்கல்பட்டு எஸ்.பி அரவிந்தன் தெரிவித்துள்ளார். தற்காப்பிற்காக போலீசார் சுட்டதில் தினேஷ் மற்றும் மொய்தீன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.