Skip to main content

'எருமை மாடா நீ... பேப்பர் எங்க...'- உதவியாளரை திட்டிய அமைச்சர்  

Published on 03/01/2025 | Edited on 03/01/2025
'Buffalo you... where is the paper...'- the minister scolded the assistant

பொதுமேடையில் உதவியாளரை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தரக்குறைவாக திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியை தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தஞ்சையில் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி மேடையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உரையாற்ற தயாராக இருந்தார். உரையை தொடங்கி, ''அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசிய அமைச்சர், திடீரென பின்னே திரும்பி தன்னுடைய உதவியாளரை நோக்கி ''எங்கே பரசுராமன்... எருமை மாடாடா நீ... பேப்பர் எங்க...'' எனக் கடிந்து பேசினார். பொதுநிகழ்ச்சியில் உதவியாளரை தரக்குறைவாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்