
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மேல தெருவைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் கடனாக ரூ.300 பணமாக வாங்கியுள்ளார். ஆனால், அந்த பணத்தை கனகராஜ் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்து வந்ததாக கூறப்படுகிறது. சுந்தர் பணத்தைத் திருப்பி கேட்கும் போது எல்லாம் ஏதோ ஒரு காரணத்தை கூறி பணத்தைத் திருப்பி அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுந்தர் கனகராஜின் மீது ஆத்திரத்தில் இருந்திருக்கிறாராம்.
இந்த நிலையில் கடந்த 8 ஆம் தேதி கனகராஜின் அண்ணன் சுரேஷ் அவரது வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சுந்தர், உன்னுடைய தம்பி கனகராஜ் எனக்கு ரூ.300 தரவேண்டும் அதனை நீ கொடு என்று கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ்குமார் பிறகு தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், இதனைக் கேட்காத சுந்தர் உடனடியாக பணத்தைக் கொடு என்று அவதூறாக பேசியிருக்கிறார். அத்துடன் அரிவாளால் சுரேஷ்குமாரை அரிவாளால் வெட்டி ரத்த காயம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமார் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் சுந்தரை கைது செய்து செய்து விசாரணை நடத்தினர். அதன்பிறகு நீதிமன்றத்தில் முன்னிறுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.