அண்மையில் அண்ணா பல்கலைகழகத்தில் ஆலோசகராக உள்ள நடிகர் அஜித்தின் ஆலோசனையை பெற்று ''தாக் ஷா'' எனும் குழுமாணவர்கள் கண்டுபிடித்துள்ள ஆளில்லா சிறிய ரக விமானம் பல போட்டிகளில் சாதனை படைத்து பாராட்டு பெற்றுவருகிறது.
அண்மையில் கல்லூரி மாணவர்களுடன் அஜித் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது. பைக் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் அண்மையில் சிறிய ரக கிளைடர் விமானங்களை வானில் பறக்கவிடும் சாகச விடீயோக்கள் கூட வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில் அண்ணா பல்கலை கழகத்தின் ஆலோசகராக இணைந்து நடிகர் அஜித் மாணவர்களுடன் சேர்ந்து ஆளில்லா விமானம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவந்தார். இந்நிலையில் அவரது ஆலோசனை குழுவில் இடம்பெற்ற ''தாக் ஷா'' என்ற குழு மாணவர்கள் சேர்ந்து ஆளில்லா சிறிய ரக விமானம் ஒன்றை வடிமைத்துள்ளனர்.
பெட்ரோலில் இயங்கியக்கூடிய அந்த விமானம் தொடர்ந்து ஆறு மணிநேரம் 7 நிமிடங்கள் வானில் பறந்தது சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமன்றி சிறியரக விமானம் என்றாலே ரிமோட் மூலம் இயக்கப்படும் என இருந்த நிலையில் அவர்கள் உருவாகியுள்ள விமானம் கணினியில் இயங்கக்கூடியதாக உள்ளது அதன் மற்றொரு சிறப்பு. இந்த சிறியரக விமானத்தை மருத்துவமனைகளில் இதய அறுவை சிகிச்சை அல்லது உறுப்புமாற்று சிகிச்சையின் போது உடல் உறுப்புகளை துரிதமாக எடுத்துச்செல்ல பயன்படுத்தலாம் என தாமரை செல்வி, செந்தில்குமார் மற்றும் நடிகர் அஜீத்குமார், அண்ணா பலகலைகழக பேராசிரியர்கள் மருத்துவத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஆலோசித்து வருகின்றனர். இந்த சிறிய ரக விமானம் பல்வேறு விமான போட்டிகளில் பரிசுகளையும், பாராட்டுக்களையும் குவித்துவருகிறது.