Skip to main content

"இருமொழிக் கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது"- ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

"AIADMK is committed to bilingualism" - O. Panneerselvam statement!

 

அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (09/04/2022) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அமைச்சரவைக்கான எழுபது விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும், மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்தி மொழியில் பேச வேண்டுமென்றும் நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழுவின் தலைவர் என்ற முறையில் உள்துறை அமைச்சர் பேசியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. 

 

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில், இந்தி மொழியைத் தாங்களாகவே மனமுவந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாகக் கற்றுக் கொள்ளலாம் என்றும், அதே சமயத்தில் இந்தி திணிப்பு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பேரறிஞர் அண்ணா கூறியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூலக் காரணம் பேரறிஞர் அண்ணா. 

 

பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையில் அ.தி.மு.க. உறுதியாக இருக்கிறது என்பதையும், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டப்போதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்