குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேர்தல் அதிகாரி வெளியிட்டார். திரௌபதி முர்முவுக்கு 2,824 வாக்குகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவராக 5,28,491 மதிப்பு வாக்குகளே தேவை என்ற நிலையில், திரௌபதி முர்முவுக்கு 6,76,803 மதிப்பு வாக்குகள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் டெல்லி செல்ல இருப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல் நேற்று, 10 நாட்களுக்குப் பின்பு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அதிமுக அலுவலகம் திறக்கப்பட்டு சாவி இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.