Worker passed away

ஈரோடு மாவட்டம் பெருந்துறை கணபதிபாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து(57). திருமணமாகாத இவர் கூலி வேலை செய்து வருகிறார். காளிமுத்துவின் அம்மா கடந்த ஆண்டு இறந்து விட்டார். அம்மாவை இழந்த துக்கத்தில் காளிமுத்து மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில், கடந்த 3ம் தேதி காளிமுத்து கட்டிலில் படுத்துக் கொண்டு பீடியை பற்ற வைத்து விட்டு, தீக்குச்சியை அணைக்காமல் கட்டிலுக்கு அடியில் வீசியுள்ளார். தீக்குச்சியில் இருந்த தீ கட்டிலுக்கு அடியில் இருந்த துணிகளில் பற்றி, கட்டில் முழுக்க பரவி காளிமுத்து மீதும் தீ பிடித்தது. காளிமுத்து வலி தாங்க முடியாமல் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் வந்து, காளிமுத்துவை மீட்டு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

Advertisment

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த காளிமுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.