Skip to main content

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

Adjournment of case seeking CBI probe in Vengai Valley case

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாகப் பலருக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் இந்த விவகாரத்தை சிபிசிஐடிக்குப் பதிலாக சிபிஐக்கு விசாரணையானது மாற்றப்பட வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து இரண்டு மாதங்களில் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அரசு முதன்மை தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, 'ஒரு நபர் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்ததாகவும், அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்