Skip to main content

இவங்க யாரை சொல்றங்களோ அவங்க தான் தமிழக பாஜக தலைவர்... பாஜக தலைமை அதிரடி திட்டம்!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது.  இது பற்றி விசாரித்த போது, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.பி. முருகானந்தம், குப்புராமு ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. 
 

bjp



இந்த நிலையில் தமிழக பாஜக தலைவரை நியமிக்க குழு ஒன்றை பாஜக தலைமை அமைத்து இருப்பதாக கூறுகின்றனர். அதில், பொன்.ராதாகிரு‌ஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிரு‌ஷ்ணன், வானதி சீனிவாசன், கே.டி.ராகவன், கருப்பு முருகானந்தம், நயினார் நாகேந்திரன், குப்புராம், மதுரை சீனிவாசன், ஏ.பி.முருகானந்தம், ஏ.என்.எஸ்.பிரசாத் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்டியலில் இடம் பெற்ற நபர்கள் அல்லது தேசிய தலைவர் அமித் ‌ஷா தேர்ந்தெடுக்கப்படும் நபர் தமிழக பா.ஜ.க. தலைவராக வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் விரைவில் பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வரும் கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்