Skip to main content

கருத்துக் கணிப்புகளின் பின்னணி... கட்சியினருக்கு டிடிவி தினகரன்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

 

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

அதில், நம்பி வாக்களித்த மக்களுக்கு எதையும் செய்யாமல் அவர்களை நிர்கதியாக தவிக்கவிட்ட மத்திய அரசையும், துரோகக் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமியை வீட்டுக்கு அனுப்பவும், திமுகவை விரட்டியடிக்கும் வகையிலும் அமமுகவுக்கு தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. 


  T. T. V. Dhinakaran



அமமுக வெற்றி என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பாக ஊடகங்களை வளைத்து, தங்களுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகளை வெளியிடச் செய்தவர்கள் இப்போது அடுத்த காரியத்தையும் கூசாமல் செய்திருக்கிறார்கள். 
 

இந்தக் கருத்துக் கணிப்புகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. அமமுக தொண்டர்களும் இதைப் புறந்தள்ள வேண்டும். உண்மை நிலவரம் அப்படி அல்ல என்பது தெரிந்தும் இப்படி ஒரு காரியத்தை அவர்கள் ஏன் செய்தார்கள் என்பதுதான் நாம் சிந்திக்க வேண்டியது. 
 

தோல்வி நிச்சயம் என்பது தெரிந்ததும், வெற்றிக்கோட்டை எட்டிப்பிடிக்கவுள்ள நமது தொண்டர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை, சலிப்பை ஏற்படுத்தி, வாக்கு எண்ணும் மையங்களில் தங்களது அதிகார சித்து விளையாட்டுக்களை ஆடலாமா என்ற நப்பாசைதான் இந்தக் கருத்துக் கணிப்புகள் பின்னணி. 


 

அமமுகவினருக்கு இது புரியாமல் இல்லை. ஆனாலும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். இந்த நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்த கருத்து கவனிக்க வேண்டியது. தேர்தல் முடிந்து பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யவும், ஆயிரக்கணக்கான இயந்திரங்களை மாற்றி வைக்கவும் நடக்கும் முயற்சிக்கு முன்னோட்டமாகவும், அதற்கு வசதியாகவும் இந்த கருத்துக்கணிப்பு வெளிவந்திருக்கிறது என்று மம்தா பானர்ஜி சொன்ன கருத்து புறம்தள்ள முடியாத ஒன்றாகும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

சார்ந்த செய்திகள்