Skip to main content

உங்கள் ஒரு பைசா யாருக்கு வேண்டும்? - வீரப்ப மொய்லி ஆவேசம்!

Published on 31/05/2018 | Edited on 31/05/2018

பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு என்ற பெயரில் மத்திய அரசு மக்களை கேலி செய்வதாக முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி ஆவேசமாக பேசியுள்ளார். 
 

veerappa moily

 

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மீதான விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண்போம் என்று தேர்தலுக்கு முன்னர் சொன்ன தற்போதைய மத்திய அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபின்னும் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் குறைக்க மறுக்கிறது. கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலின்போது மாற்றமில்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை, கடந்த 17 நாட்களாக ஏறுமுகத்தைச் சந்தித்து நேற்று விலைக்குறைப்பைச் சந்தித்தது. அதுவும் வெறும் 1 பைசா மட்டுமே. 
 

இதனைப் பலரும் கண்டித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பெட்ரோலியத்துறையின் முன்னாள் அமைச்சருமான வீரப்ப மொய்லி பேசுகையில், ‘பெட்ரொல், டீசல் விலையில் ஒரு பைசா குறைத்திருப்பது அர்த்தமற்றது. இதன்மூலம் மக்களைக் கேலி செய்ய முயற்சிக்கிறதா இந்த அரசு? எங்கள் ஆட்சியில் இருந்ததை விடவும் தற்போது பெட்ரோல், டீசல் மீது அதிகப்படியான வரிச்சுமையை விதிக்கிறார்கள். இது மிக அதிகம். மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஒட்டுமொத்த ஆசிய கண்டத்திலும் இந்தியாவில் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக இருக்கிறது. மிகக்கொடூரமான விதத்தில் இது கையாளப்படுகிறது’ என ஆவேசமாக பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்