Skip to main content

ராகுல்காந்தியும் நிபா வைரஸும் ஒண்ணு! - ஹரியானா அமைச்சர் பகீர்

Published on 29/05/2018 | Edited on 29/05/2018

ராகுல்காந்திக்கும் நிபா வைரஸுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை என ஹரியானா மாநில அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
 

Rahul

 

ஹரியானா மாநிலத்தில் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்கிறது. இம்மாநில சட்டசபையில் அமைச்சராக இருப்பவர் அனில் விஜ். எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்வதில் முக்கியப்பங்கு வகிக்கும் இவர், தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார். 
 

அனில் விஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ராகுல்காந்திக்கும் நிபா வைரஸுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. ராகுல்காந்தியோடு ஏதாவது அரசியல் கட்சி தொடர்பு வைத்துக்கொண்டால், அது உடனடியாக அழிந்துபோய்விடும்’ என பதிவிட்டுள்ளார். 
 

கேரள மாநிலத்தில் 14 பேரின் உயிரைக் குடித்த மர்மக்காய்ச்சல், நிபா எனும் உயிர்க்கொல்லி வைரஸின் மூலமாக பரவிவருகிறது. கேரளாவைத் தொடர்ந்து நாடு முழுவதும் நிபா எனும் கொடிய வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஒப்பிட்டிருப்பது காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்