Skip to main content

ஈரோட்டில் இருந்து கிளம்பிச் சென்ற வடமாநில தொழிலாளர்கள்; உற்பத்தி கடும் பாதிப்பு!

Published on 11/05/2024 | Edited on 11/05/2024
Due to the exodus of North State workers from Erode, the production was severely affected

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தற்போது வரை 3  கட்ட தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழகத்தில் கட்டுமானம் தொடங்கி பெரிய உணவகங்கள், சூப்பர் மார்க்கெட், கோழிப்பண்ணை, ஆழ்துளை கிணறு தோண்டும் வாகனங்கள், நட்சத்திர விடுதிகள், செங்கல் சூளை, சாய, தோல் தொழிற்சாலை வணிக நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இயங்கி வரும் ஆயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  ஈரோடு மாநகர் பகுதி, புறநகர் பகுதி, பெருந்துறை சிப்காட் மற்றும் மாவட்ட முழுவதும் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் ஜவுளி நிறுவனங்கள், செங்கல் சூளை, கெமிக்கல் தொழிற்சாலை, கல்குவாரிகள், தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி ஓட்டு போடுவதற்காக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். முதற்கட்ட தேர்தலுக்காக சென்றவர்களே இன்னும் ஈரோடு திரும்பாத நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலை ஒட்டி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளதால் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம் , ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஜவுளி, உணவகங்கள் எனப் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தாளவாடி பகுதிகளில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள், தோட்டங்களில் அவர்களின் பங்கு மிகப் பெரியது. தற்போது அவர்கள் ஓட்டு போடுவதற்காக தங்களின் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்ததோடு தோட்ட தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஈரோடு மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ஓட்டு போடுவதற்காக அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகள், செங்கல் சூளை, ஜவுளி நிறுவனங்கள் முக்கியமாக கட்டுமான பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இவர்கள் மீண்டும் பணிக்கு வரும் வரை தொழிற்சாலைகளில் உற்பத்தி குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மேய்ச்சலுக்குச் சென்ற பசு மாடு உயிரிழப்பு - வனத்துறை அறிவிப்பால் பீதியில் கிராம மக்கள்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
The death of a cow that went to graze - the villagers are in panic due to the notification of the forest department

                                                       கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, சிறுத்தை,  புலி, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. சமீப காலமாக தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, மற்றும் புலிகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு , நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகமணி (41). இவர் 4 மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் மாடுகளை தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை மாட்டைப் பிடிக்கச் சென்றபோது 4  பசு மாடுகளில் ஒன்று பசுமாடு மாயமாகி இருந்தது. பின்னர்  நேற்று காலை மீண்டும் தேடிய போது அங்குள்ள ஓடையை ஒட்டி பசு மாடு மர்ம விலங்கால் கடிபட்டு இறந்து கிடந்தது. இதுபற்றி தாளவாடி வனத்துறையினருக்கு நாகமணி தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை இறந்த பசு மாட்டினை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பதிவாகி இருந்த கால் தடைகளை வைத்து  பசுமாட்டை அடித்துக் கொன்றது புலி என வனத்துறையினர் தெரிவித்தனர். புலி பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பாதித்தால் அங்குள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.

Next Story

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? - அதிரவைக்கும் சோக சம்பவம்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
A disabled woman was assaulted?-A shocking incident


ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பூசாரிப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்தவர்கள் ராமன்-பழனாள் தம்பதி. மனைவி பழனாள் அஞ்சனூர் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூன்று மகளுக்கும், ஒரு மகனுக்கும், திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

கடைசி மகள் கவிதாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 32 வயது ஆகிறது மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் பழனாளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மாலையில் கவிதா திடீரென மாயமானார். அவரை அவரது தாய் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். எனினும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. நம்பியூர் அருகே இருகாலூர் சமத்துவபுரத்தில் உள்ள ரமேஷ் என்பவர் வீட்டின் கட்டிலில் கவிதா ஆடை இல்லாத நிலையில் இறந்து கிடந்துள்ளார். அவரது உடலை பார்த்து தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கவிதா உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆடைகளற்ற நிலையில் செல்லம்மாள் பிணமாக கிடந்ததால் அவர் பாலியல் வன்கொடுமை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கவிதா இறந்து கிடந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ் தலைமறைவாகியுள்ளார். அவரைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பிறகு தான் கவிதா எவ்வாறு இறந்தார்? என்ற விவரம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.