Skip to main content

எடப்பாடி பக்கம் வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

தேர்தலில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கையில் வித்தியாசமான அணுகுமுறை இருப்பதால் அவருக்கு ஆதரவாக இருந்த எம்.பி,எம்.எல்.ஏ.க்கள்,மற்றும் கட்சி நிர்வாகிகள் எடப்பாடிக்கு ஆதரவாக செல்வதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இது பற்றி விசாரித்த போது, நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்க எடுத்த முயற்சியில் சிறிது அளவு கூட தனது ஆதரவாக இருந்த கட்சி நிர்வாகிகளுக்கு எடுக்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் தனது மகன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றவுடன் மத்திய அமைச்சரவையில் இடம் பெற டெல்லியில் விசிட் அடித்து பாஜக நிர்வாகிகளிடம் அணுகியதை அதிமுக கட்சியில் இருக்கும் சீனியர்கள் யாரும் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

 

ops



அதிமுக கட்சி சார்பாக சீனியர்களில் ஒருவருக்கு மத்திய மந்திரி பதவி வாங்கலாம் என்று எடப்பாடி தரப்பு பாஜகவை அணுகிய போது,தனது மகனுக்கும் மந்திரி பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் கேட்டது கட்சியில் உட்கட்சி பூசலை அதிகமாக்கியது.இதனால் ஓபிஎஸ் தர்மயுத்தம் இருந்த போது அவருக்கு ஆதரவாக இருந்த ஆதரவாளர்கள் தற்போது எடபாடிக்கு ஆதரவாக உள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக கே.பி.முனுசாமி,மைத்ரேயன்,மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள் சமீப காலமாக எடப்பாடிக்கு ஆதரவாக உள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்