Skip to main content

ஓபிஎஸ் டெல்லி விசிட்! டென்ஷனில் இபிஎஸ்!

Published on 23/07/2019 | Edited on 23/07/2019

தமிழகத்தில் பணப்பட்டுவாடா பிரச்சனை காரணமாக வேலூர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. ரத்து செய்யப்பட்ட  வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக திமுக பொருளாளர் துரைமுகனின் மகன் கதிர் ஆனந்த் களமிறங்குகிறார். அதிமுக சார்பாக புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அதிமுக ,திமுக இரண்டு கட்சிகளும் வேலூர் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதனால் இரண்டு கட்சி தேர்தல் பொறுப்பாளர்களும் களப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 
 

admk



இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டில் அரசியல் உள்நோக்கம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். டெல்லி சென்ற ஓபிஎஸ் முதலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அவரோட நடைபெற்ற சந்திப்பில் அரசியல் நிலவரங்கள் குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் அமைச்சரவை விரிவாக்கத்தின் போது அதிமுகவிற்கும் இடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து தமிழகத்திற்கு வேண்டிய நிதி குறித்து மனு கொடுத்துள்ளார் என்று கூறுகின்றனர். அதோடு பாஜகவின் மேலும் சில மத்திய அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான சில கோரிக்கைகளை வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் டெல்லி விசிட்டால் எடப்பாடி தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக சொல்லப்படுகிறது.   

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆடு திருட்டில் முன்விரோதம்; அதிமுக நிர்வாகி கொலையில் திடுக்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                           கொலை செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி  புஷ்பநாதன்   

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

ஆலை காலனி பகுதியை சேர்ந்த நேதாஜி, அதே பகுதியைச் சேர்ந்த அஜய் மற்றும் சந்தோஷ் ஆகிய மூன்று பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மூவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர்கள் என கூறப்படும் நிலையில், ஆடுகளை திருடி, அந்த பகுதியில் கசாப்பு கடை நடத்தி வந்த அதிமுக நிர்வாகி புஷ்பநாதனுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குறைந்த விலைக்கு ஆடுகளை தன்னுடைய கசாப்பு கடைக்காக வாங்கி வந்த புஷ்பநாதனிடம் திருடப்பட்டு வந்த ஆடுகளை தொடர்ந்து விற்று வந்தனர். இந்நிலையில் நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேரும் தேவனாம்பட்டினத்திற்கு காரில் சென்று திமுக பிரமுகர் ஒருவரின் வீட்டில் எட்டு ஆடுகளை திருடியுள்ளனர். இது குறித்த வழக்கில் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Antecedent in goat theft; AIADMK official shocked by murder

                            கைது செய்யப்பட்ட சந்தோஷ், அஜய், நேதாஜி 

ஆடு திருட அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்திருந்தனர். இந்நிலையில் தங்களிடமிருந்து ஆடுகளை வாங்கிய புஷ்பநாதன் தங்கள் 3 பேரையும் ஜாமீன் எடுப்பார், வாகனத்தையும் போலீசிடம் இருந்து மீட்டர் தருவார் என மூன்று பேரும் நினைத்திருந்தனர். ஆனால் புஷ்பநாதன் அவ்வாறு செய்யாததால் புஷ்பநாதனுக்கும் மூன்று இளைஞர்களுக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து வந்தவர்கள் இது குறித்து புஷ்பநாதனை நேரில் சந்தித்து கேட்டுள்ளனர். இதில் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையிலிருந்த மூன்று பேரும் புஷ்பநாதனை வெட்டி கொன்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது

Next Story

முன்னாள் கவுன்சிலர் கொலை; கைது செய்யப்பட்டவர்களின் வீடுகள் சூறை!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Cuddalore Vandipalayam Former ADMK councilor Pushparajan incident

கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் புஷ்பநாதன் என்பவர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனால் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேதாஜி, சந்தோஷ் மற்றும் அஜய் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளை புஷ்பநாதனின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. முன் விரோதம் காரணமாக புஷ்பநாதனை மூன்று பேரும் சேர்ந்து கொலை செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதியில் அதிமுக மாவட்டப் பிரதிநிதியும் முன்னாள் கவுன்சிலருமான புஷ்பநாதன் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், மறைந்த புஷ்பநாதன் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதை நான் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளேன். இந்த ஆட்சியில் பொதுமக்கள், காவல்துறையினர், அரசியல் கட்சியினர் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. புஷ்பநாதனை படுகொலை செய்தோரைத் துரிதமாகக் கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.