Skip to main content

NLC-யில் கடும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்: நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் வலியுறுத்தல்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

neyveli


நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஆறு பேர் இறந்தது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன்.

 

அதில், "என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் வகையில் அனைத்துத் தொழிலாளர்களும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறார்கள்.

 

ஆனால், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் சரிவர செய்வதில்லை. பொருளாதார வளர்ச்சி லாபம் எந்த அளவுக்கு முக்கியம் என்று கருதுகிறதோ அதைவிட தொழிலாளர்கள் உயிர் முக்கியம் என்பதை என்.எல்.சி. நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

லாபம் ஈட்டுவதில் செலுத்தும் அக்கறையை மனித உயிரழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும். தொழிலக பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புப் பணிகளைத் தரமான முறையிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளவேண்டும்.

 

neyveli

 

என்.எல்.சி. விபத்தில்லா நிறுவனம் என்று நிலையை உருவாக்க வேண்டும். இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சபா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அரசுத் தரப்பில் சேர்மன் ராகேஷ் குமார், மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், திட்ட இயக்குனர் நாகேஸ்வரராவ், மின் துறை இயக்குனர் ஷாஜி ஜான், செயல் இயக்குனர் சதீஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

 

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தி.மு.க. எம்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ.-க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், துரை சரவணன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ .கலைச்செல்வன் மற்றும் பா.ம.க., த.வா.க., வி.சி.கட்சி நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்தப் பேச்சுவார்த்தையின்போது சேர்மன் ராகேஷ் குமார் கூறுகையில், என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இதனைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெய்வேலி நகரில் வணிகர் சங்கத்தின் சார்பாக கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

 

என்.எல்.சி. நிர்வாகம் இதுபோன்ற விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படும்போது வேலை கொடுப்பதாலும் இழப்பீடு வழங்குவதாலும் மட்டும் நிரந்தரத் தீர்வை எட்டி விடமுடியாது.

 

தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரும் வகையில் தரமான தளவாடங்கள் பொருத்தப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகப் பணிகளை வழங்கக்கூடாது. திறமையான வல்லுனர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். தொழிலாளர்களை நிர்வகிக்கும், வேலை வாங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.