Skip to main content

பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் திடீர் சந்திப்பு!

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
Nitish Kumar's surprise meeting with Prime Minister Modi

பிரதமர் மோடியைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்துப் பேசியுள்ளார்.

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (04.06.2024) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நாளை வெளிவர இருக்கும் தேர்வு முடிவுக்காகப் பொதுமக்கள் ஆர்வமுடன் நாளைய விடியலுக்காக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியைப் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று (03.06.2024) மாலை சந்தித்துப் பேசியுள்ளார். பிரதமர் மோடியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகப் பார்க்கப்படுகிறது. முன்னதாக பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ்குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் எனத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்