சொத்துக்குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 வருடம் சிறை தண்டனை விதித்தது கடந்த 2017 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துள்ளார். இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே தண்டனை உள்ளது என்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/462_5.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்த நிலையில், சசிகலாவின் சித்தப்பாவான மறைந்த விவேகானந்தனின் உடன்பிறந்த தம்பி டாக்டர் கருணாகரன், திடீரென்று மரணமடைந்திருக்கிறார். இது மன்னார்குடித் தரப்பில் பலத்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திவாகரனின் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்தில் கூட கலந்துக்காத மன்னார்குடி உறவுகள் எல்லோரும் இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டதாக சொல்லப்படுகிறது. சசிகலா இந்த துக்கத்துக்கும் வரவில்லை. தினகரனோ, இந்த இறப்புக்கு வராவிட்டாலும், மற்ற சடங்குகளில் கலந்துக் கொள்வேன் என்று சொல்லியிருப்பதாக கூருகின்றனர். சசிகலா ரிலீஸ் ஆனதும், அ.தி.மு.கவை தன்வசப்படுத்தும் வகையில் காய் நகர்த்துவார் என்றும் கூறிவருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. முக்கிய பொறுப்பு பற்றி முடிவானதும் ரிலீஸாக விரும்புவதாக சசிகலா தரப்பு பேசி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)