Skip to main content

மோடி பின்னடைவு; ராகுல் முன்னிலை; காலை9.30-க்கான தேர்தல் நிலவரம்!

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Modi backlash; Rahul's lead; Election status for 9.30

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் உரிய சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.  9.30 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 272 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 216 இடங்களிலும், மற்றவை 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

தமிழகத்தில் 29 தொகுதிகளில் திமுகவும், அதிமுக 3 இடத்திலும், பாஜக ஒரு இடத்திலும் முன்னணியில் உள்ளது. தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலையில் உள்ளார். தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலையில் உள்ளார். வேலூரில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். சிதம்பரத்தில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னணியில் உள்ளார். தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி முன்னிலையில் உள்ளார். திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் முன்னிலையில் உள்ளார். கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார். திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ முன்னிலையில் உள்ளார். தேனியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார். 

சார்ந்த செய்திகள்