ar rahman support kamala harris for america election

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்பட்டு வரும் நிலையில் இரண்டு வேட்பாளர்களும் தொலைக்காட்சியில் விளம்பரம், சமூக ஊடகங்கள், வலைதளங்கள் என அனைத்து வகையிலும் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisment

அந்த வகையில் கமலா ஹாரிஸை ஆதரித்து ‘ஏஏபிஐ விக்டரி ஃபண்ட்’(AAPI Victory Fund) என்ற அமைப்பு இசை கச்சேரியை நடத்தியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து அந்த அமைப்பு இசை கச்சேரி நடத்தியுள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது யூட்யூபில் வெளியாகியுள்ளது. அதில் ஏ.ஆர் ரஹ்மான் கமலா ஹாரிஸ் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “ஒரு தெற்காசிய தமிழனாக உலகத்தை சிறந்த இடமாக மாற்ற கமலா ஹாரிஸ் முற்படுகிறார். அவரின் அர்பணிப்பை கண்டு நான் மிகவும் பெருமைப் படுகிறேன். அதோடு முதல் பெண் அதிபரை பார்க்க இருக்கிறோம். அவர் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்” என்றார்.

Advertisment

ar rahman support kamala harris for america election

பின்பு தான் இசையமைத்த பிரபலமான பாடல்களை பாடினார். இதில் ‘ஜெய் ஹோ’, ‘சிங்கப் பெண்ணே’ உள்ளிட்ட பாடல்களும் இடம்பெற்றன. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.