Skip to main content

நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published on 04/03/2018 | Edited on 04/03/2018

 

spvelumani

 

கோவை மாவட்டம் பாதிக்கும் வகையில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை கேரள அரசு தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  நியாயம், தர்மப்படி கேரள அரசு நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர், தடுப்பணையை தடுக்க முதல்வர் வேகமாக கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும், நீதிமன்றம் சென்றாவது தடுப்பணை பணி தடுத்து நிறுத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். 

 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசிற்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கப்படும் என்று கூறியவர், எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற ஸ்டாலின் கருத்திற்கு பதிலளித்தவர் 6 வாரம் காலம் இருக்கிறது பொருத்திருந்து பார்ப்போம் என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசை நம்புவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு மழை குறைவானதால் நிலத்தடி நீர் வெகுவாக பாதித்து சுமார் 1300 அடிக்கு போர்வெல் சென்றுவிட்டதாக குறிப்பிட்டவர், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க மாற்று திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும், கோவை மாவட்ட நீர் தேவைக்காக பில்லூர் 3 ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் டெண்டர் விடப்படும் என்றும் அறிவித்தார். 

 

தொடர்ந்து பேசியவர், டெல்லி சென்று சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்ததை அடுத்து, 100 வார்டுகளில் 18 வார்டுகளில் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படும் திட்டத்தில் தளர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டம்  வேகப்படுத்தபட்டுள்ளதாகவும், அம்ரூத் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 2 ஆம் இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டவர், இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் சைக்கிள்கள் பகிர்ந்தளிக்கும் திட்டம் மற்றும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக இயற்கை முறையிலான மக்கும் பைகள் அறிமுக செய்யப்படுவது சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் அவசியமானதாக உள்ளதாக குறிப்பிட்டார்.

 

முன்னதாக, ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற தனியார் பங்களிப்புடன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் செயல்படுப்படவுள்ள இந்த சைக்கிள்கள் பகிர்ந்தல் திட்டம் அறிமுக விழாவை துவக்கி வைக்கும் பொருட்டு, app system சைக்கிளை ஓட்டினார். அவருடன், மாநகராட்சி ஆணையரும், சட்டமன்ற உறுப்பினர்களும் உடன் சைக்கிளை ஓட்டினர். மேலும், பொதுமக்களுக்கு இயற்கை முறையிலான மக்கும் பைகளை  வழங்கி பையோ பைகள் திட்டத்தை துவக்கி வைத்தார். 

சார்ந்த செய்திகள்