Skip to main content

பாமகவிற்கும், பாஜகவிற்கும் செக் வைக்கும் திமுக... அப்செட்டில் ராமதாஸ்... தப்பிக்க பார்க்கும் பாஜக!

Published on 03/12/2019 | Edited on 03/12/2019

சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் சாதிய வன்மத்தை கேள்வி கேட்கும் படம் என, 'அசுரன்' திரைப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார். இதற்கு கருத்து தெரிவிக்கும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், அசுரன் படம் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை, உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பாரா திமுக தலைவர் ஸ்டாலின் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கேள்வி எழுப்பினார்.   

 

dmk



இதனையடுத்து பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில், பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார். இது தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்திய விசாரணையில் தமிழக அரசு, திமுக தலைமை மற்றும் சீனிவாசன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்பு, முரசொலி அலுவலக இடம், பஞ்சமி நிலம் என தவறான கருத்தை கூறியதாக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜக மாநில செயலாளர் சீனிவாசன் ஆகியோர் 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பினார். 

 

 

pmk



அப்படி மன்னிப்பு கேட்க தவறினால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு இருவர் மீதும் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் முரசொலி அலுவலகத்தை வைத்து பாமகவும், பாஜகவும் அரசியல் செய்வதாக கூறிய திமுக, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கத்தை கூறியது. ஆனால் புகார் கூறிய சீனிவாசன் விசாரணைக்கு ஆஜராகாமல் அவகாசம் கேட்டு நழுவி சென்றார்.  இந்த நிலையில் பாமக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. இந்த வழக்கு வரும் 5-ம் தேதி விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.


 

சார்ந்த செய்திகள்