இந்தியாவில் பணியாற்றுவோரில் பெண்களின் சதவீதம் கடந்த 10 ஆண்டுகளில் வெகுவாக குறைந்திருப்பதாக டிலாய்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுமார் 19.5 கோடி பெண்கள் அமைப்புச்சாரா துறைகள் மற்றும் ஊதியமற்ற வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் டிலாய்ட் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மேலும் தரமான கல்வி கிடைக்காதது, தகவல் தொழில்நுட்ப இடைவெளி போன்றவை பெண்கள் அவர்களின் திறனை மேம்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
டிலாய்ட் என்ற அமைப்பு கடந்த 2005-ம் ஆண்டு பணியாற்றுவோரில் பெண்களின் சதவீதம் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது அதில் மொத்த பணியாற்றுபுவர்களில் பெண்களின் சதவீதம் 36.7%-ஆக இருந்துள்ளது. அதே அமைப்பு 2018-ம் ஆண்டில் நடத்திய ஆய்வில் அந்த சதவீதம் 26%-ஆக குறைந்துள்ளதாக அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகம் போன்றவையும் பெண்களுக்கு தடைகளாக உள்ளதாக அந்த ஆய்வின் முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.