Skip to main content

‘நீதி வேண்டும்... நீதி வேண்டும்...’ - பொதுப் பணித்துறை அலுவலகத்தில் பெண்கள் போராட்டம்! 

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

woman struggle in pondicherry Public Works Department office

 

புதுச்சேரி பொதுப்பணித் துறையில் அரசு ஊழியராகப் பணிபுரிந்து பணியின் போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2014 ஆம் ஆண்டு பெற்றோர் மற்றும் கணவனை இழந்த வாரிசுதாரர்களுக்கு பணிகள் வழங்க 190 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பணியில் சேர்வதற்காக பணி அழைப்பு ஆணை வழங்கப்பட்டது. ஆனால் அதில் 167 பேருக்கு மட்டும் பணி ஆணை வழங்கப்பட்டு 23 பெண் வாரிசுகளுக்கு பணி வழங்கப்படவில்லை.

 

பாதிக்கப்பட்ட 23 பெண்களும் முதல்வரிடம் முறையிட்டனர். அதையடுத்து முதல்வர் ரங்கசாமியின் உத்தரவின் பேரில் மீண்டும் அவர்கள் 2016 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் மூன்று மாத காலம் வவுச்சர் ஊழியராக பொதுப்பணித் துறையில் பணியாற்றி வந்தனர். அதன்பிறகு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன் பொதுப்பணித் துறையில் பணிக்கு அமர்த்தப்பட்ட 23 பெண் ஊழியர்கள் உட்பட 716 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

 

இந்த நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்ட நிலையில், 23 பெண்களுக்கு மட்டும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. அவர்கள் மீண்டும் வேலை கேட்டு பல கட்ட போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் உள்ளே சென்ற பெண் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், 'நீதி வேண்டும் நீதி வேண்டும்' என்ற பதாகைகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இது குறித்து பெண் ஊழியர்கள் கூறுகையில், "பணி நீக்கம் செய்யப்பட்ட நாங்கள் பெண்ணாக இருப்பதால் அரசு புறக்கணிக்கிறது. மீண்டும் பணி வழங்கும் வரை போராடுவோம்"  என்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்