Skip to main content

‘மோடி பிரதமராக பதவியேற்பது எப்போது?’ - வெளியான தகவல்!

Published on 06/06/2024 | Edited on 06/06/2024
When will Modi take office the information released

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார். 

When will Modi take office the information released

இதனையடுத்து மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஜூன் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு பதவி ஏற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜூன் 17 ஆம் தேதி மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக ஜூன் 8 ஆம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தயக்கம் காட்டுவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்பது கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமானது ஆகும். ஒரு வேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் திவாரி உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்