Skip to main content

மேற்குவங்கத்தில்  நடந்தது வரலாற்றில் எங்கும் நடக்காதது - ராஜ்நாத் சிங்

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
rajnath singh


சாரதா சிட்ஃபண்ட்  மோசடி வழக்கில் சிபிஐ விசாரணையை மம்தா தடுத்து நிறுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.
 

மேலும் அவர் கூறியது, கடமையை செய்ய கொல்கத்தா சென்ற சிபிஐ அதிகாரிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, மாநில காவல்துறையினரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கொல்கத்தாவில் நடந்த இந்த நிகழ்வு வரலாற்றில் எங்கும் நிகழாதது என்று கூறினார். 
 

இதனிடையே, இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'முன் மொழிந்த ராஜ்நாத் சிங்; வழி மொழிந்த அமித்ஷா' - கைதட்டி வரவேற்ற ஓபிஎஸ்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
nda alliance MP meeting in delhi

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மோடி வந்திருந்த பொழுது எம்பிக்கள் அனைவரும் 'மோடி... மோடி...' என முழுக்கமிட்டு அவரை வரவேற்றனர். தொடர்ந்து பேசிய பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தனது வாழ்க்கையை நாட்டுக்காகவே அர்ப்பணித்துள்ளார் மோடி. அனைவருக்கும் அனைத்தும் என்ற நோக்கத்துடன் பாஜக கூட்டணி அரசு செயல்படும். கடந்த 10 ஆண்டுகளில் யாரும் நினைத்துப் பார்க்காத வளர்ச்சியை மோடி வழங்கி உள்ளார்' என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், ''இந்தக் கூட்டணி நிபந்தனையில் உருவான கூட்டணி இல்லை அர்ப்பணிப்பில் உருவான கூட்டணி. என்.டி.ஏ கூட்டணி அரசுக்கு எந்தவித அழுத்தமும் கிடையாது. அறுபது ஆண்டுகள் கழித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்று புதிய சாதனை படைத்துள்ளோம். மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு நான் முன்மொழிகிறேன்'' என்றார்.

மோடியின் பெயரை உச்சரித்ததும் தேசிய ஜனநாயகக்  கூட்டணியின் எம்பிக்கள் 'மோடி... மோடி..' என முழக்கமிட்டனர். பின்னர் பேசிய அமித்ஷா மோடியை மீண்டும் பிரதமர் ஆக்குவதற்கு வழிமொழிந்ததோடு நாடாளுமன்றக் குழு தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 'பிரதமர் மோடியின் பத்தாண்டுகள் ஆட்சியில் மகத்தான வளர்ச்சியை நாடு அடைந்துள்ளது. உலக அளவில் சிறந்த தலைவர் பிரதமர் மோடி' எனப் புகழாரம் சூட்டி பேசினார்.

தமிழகத்தில் இருந்து என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் கலந்து கொண்டு எழுந்து நின்று கைதட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர். 

Next Story

“இனி இந்தியாவில் ராமராஜ்ஜியம் நிறுவப்படும்” - ராஜ்நாத் சிங்

Published on 19/05/2024 | Edited on 19/05/2024
Rama Rajyam will be established in India says Rajnath Singh

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதியும், நான்காம் கட்டமாக ஏப்ரல் 13ஆம் தேதியும் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, நடைபெறும் அடுத்தகட்ட தேர்தலை எதிர்கொண்டு காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் சம்பல்பூர் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ஆதரித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒடிசா மாநிலத்தில் தற்போது உள்ள பரிதாப நிலைக்கு காங்கிரஸும், பி,ஜே,டி கட்சியும் தான் காரணம். நாட்டில் உள்ள ஏழை மக்களின் துயரங்களை நீக்கக்கூடிய முதல் பிரதமர் மோடி தான். கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு வீடு, குடிநீர் குழாய் இணைப்பு, இலவச சமையல் எரிவாயு, இலவச உணவு தானியங்கள், கழிப்பறைகள் உள்ளிட்ட பலவற்றை வழங்கியுள்ளார் பிரதமர் மோடி. பாஜக அளித்த வாக்குறுதி அளித்தப்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் தன்னுடைய கோவிலுக்கு தற்போது வந்துள்ளதால் இனி இந்தியாவில் ராமராஜ்ஜியம் நிறுவப்படும்” என்றார்.

மேலும், உலகளவில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியுள்ள பிரதமர் மோடி, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் அதிகாரிகளுடன் பேசி, இரு நாடுகளுக்கு இடையேயான போரை நான்கரை மணி நேரம் நிறுத்தினார். அப்போது 22,000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் போரில் இருந்து மீட்கப்பட்டனர் எனத் தெரிவித்தார்.