Skip to main content

திருப்பதியில் கரோனா பாதிப்பு தீவிரம் - தரிசனத்தை நிறுத்த காவல்துறை கோரிக்கை!

Published on 19/07/2020 | Edited on 19/07/2020
b

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி  தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தி வையங்கள் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இந்தியாவில் பல கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு தற்போது 6,000 வரையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 12,500 ஆக அதிகரித்துள்ளது. தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை 2,63,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் 15 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானதால், தற்போது காவல்துறை அதிகாரிகள் பொது தரிசனத்தை நிறுத்தி வைக்குமாறு தேவஸ்தான அமைப்பிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

செல்பி எடுக்க முயன்று விபரீதம்; சிங்கம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Tragedy trying to take a selfie; One killed after being attacked by a lion

அண்மையில் திருப்பதியில் காட்டு வழியாகச் சென்று சிறுமி புலி தாக்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது திருப்பதியில் சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற பார்வையாளர் ஒருவர் சிங்கம் தாக்கி உயிரிழந்திருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சுந்தரி, குமார் தெங்கள்பூர் உள்ளிட்ட இரண்டு ஆண் சிங்கங்களும், ஒரு பெண் சிங்கமும் உள்ளது. பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு நாளும் சிங்கங்கள் பாதுகாப்பு கூண்டில் இருந்து காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து முப்பது வரை திறந்து விடப்படுவது வழக்கம்.

இந்நிலையில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் இருந்து வளாகத்திற்குள் இன்று திறந்துவிடப்பட்டது. அப்போது ஒருவர் செல்பி எடுப்பதற்காக முயன்றபோது சிங்கம் நடமாடும் வளாகத்திற்குள் தவறி விழுந்தார். அவரது ஆடைகளைக் கடித்துக் குதறிய சிங்கம் அவரது கழுத்தையும் கடித்துக் குதறியது. இதைப் பார்த்த வெளியே இருந்த மற்ற பார்வையாளர்கள் அலறியடித்து ஓடினர். அதன் பிறகு மரத்தில் ஏறித் தப்ப முயன்றபோதும்  விடாத சிங்கம் அவரைத் தாக்கிக் கொன்றது.

இந்த சம்பவம் குறித்து பூங்கா நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சிங்கத்தை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ஊழியர்கள் அதனைக் கூண்டில் அடைத்தனர். அந்த நபரின் உடல் கைப்பற்றப்பட்டது. சிங்கத்தின் தாக்குதலால் உயிரிழந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்தவர் என்பதும், அவரின் பெயர் குருஜாலா பிரகலாதா என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

திருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம்!

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
dhanush in Tirupati

கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனது 50 ஆவது பட பணிகளை கவனித்து வருகிறார் தனுஷ். அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்துள்ளது. இதை தவிர்த்து ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். மேலும் ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் படம் தனுஷின் 51வது படமாக உருவாகிறது. படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கத் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பூஜை நடைபெற்றது. இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு முன்னணி நடிகர் நாக அர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதன்படி திருப்பதி அலிபிரி பகுதியில் நேற்று மலையடிவாரத்தில் படப்பிடிப்பு நடந்த நிலையில் திருமலைக்கு செல்லும் பக்தர்கள், மாற்று பாதைக்கு காவல்துறையினரால் மாற்றப்பட்டனர். ஆனால் அந்த பாதை குறுகிய பாதை என்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதையடுத்து அங்கு படப்பிடிப்பை தொடர்வதற்கு அப்பகுதி மக்கள் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, படப்பிடிப்பிற்கு தடை விதிக்கக்கோரி பாஜகவினர் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் திருப்பதியில் இருக்கும் தனுஷ், ஏழுமலையான் கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பட்டு சால்வை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. பின்பு அவரை காண அங்கு ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். அவருடன் சிலர் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர்.