Skip to main content

இந்தியப் பொருளாதாரம் எந்த திசை நோக்கி பயணிக்கும்? - ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தகவல்!

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

rbi governor

 

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், “இந்தியப் பொருளாதாரம் இனி மேல்நோக்கியே நகரும்” எனக் கூறியுள்ளார்.

 

2020 ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் கடுமையான பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், 2021ஆம் ஆண்டு புதிய பொருளாதார சகாப்தத்திற்கு களம் அமைக்கப்போகிறது என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "கரோனாவால் இந்தியப் பொருளாதரத்திற்கு ஏற்பட்ட சேதத்தை மாற்றுவோம் என்பது கணிப்போடு கூடிய எங்கள் நம்பிக்கை. முன்னோக்கிச் செல்கையில், இந்தியப் பொருளாதாரம் ஒரே திசையில் பயணிப்பதை நாம் காண்போம். அது மேல்நோக்கியே பயணிக்கும். 2020ஆம் ஆண்டு நமது திறன்களையும் சகிப்புத்தன்மையையும் சோதித்தாலும், 2021 நமது வரலாற்றில், ஒரு புதிய பொருளாதார சகாப்தத்திற்கு அடித்தளம் அமைக்கிறது.

 

மேலும் 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 10.5% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அவர், இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

சார்ந்த செய்திகள்