Skip to main content

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு; தொடர் போராட்டத்தில் மம்தா

Published on 02/06/2023 | Edited on 02/06/2023

 

support for wrestlers; Mamata in continuous struggle

 

இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவராக பாஜக எம்.பி. பிரிஜ்பூஷண் சரண் சிங் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், சரண் சிங் மற்றும் தேசிய பயிற்சி முகாமில் உள்ள பயிற்சியாளர்கள், நடுவர்கள் ஆகியோர் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் குற்றம் சாட்டியிருந்தார்.

 

தொடர்ந்து பாஜக எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும்; அதோடு அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனக் கூறி பஜ்ரங் புனியா உள்ளிட்ட ஒலிம்பிக் பதக்கங்களை வென்ற வீரர்கள் கூட இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததால் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறப்பு விழாவின் போது நீதி கேட்டு மல்யுத்த வீரர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். அவர்களுக்கு விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன. மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தாங்கள் வெற்றி பெற்று பெற்ற பதக்கங்களை மாலை 6 மணிக்கு ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் வீசி விடுவோம் என வீராங்கனைகள் அறிவித்தனர். மேலும் டெல்லி இந்தியா கேட்டில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அறிவித்தனர். தொடர்ந்து நேற்று மாலை ஹரித்வாரில் குவிந்த அவர்களை விவசாய சங்கத்தினரும் மக்களும் சமாதானப்படுத்தினர். தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பிரிஜ் பூஷன் சிங் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க 5 நாள் கெடு விதிக்கப்பட்டது.

 

இந்நிலையில் நேற்று முன் தினம் கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “டெல்லியில் நமது மல்யுத்த வீரர்கள் தாக்கப்பட்டதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மல்யுத்த வீரர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்துள்ளேன். அவர்கள் நாட்டிற்காக பதக்கங்களை வென்றவர்கள். அந்த பதக்கங்கள் அவர்களது பெருமையின் குறியீடு. எங்கள் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் இது குறித்து பேசி, ஹஸ்ரா மோர் முதல் ரவீந்திர சரோபர் வரை விளையாட்டு வீரர்களுடன் பேரணி நடத்த வேண்டும் என கூறியுள்ளேன். மல்யுத்த வீரர்களின் சம்மேளனத் தலைவரை கைது செய்ய உச்சநீதிமன்றமே உத்தரவிட்ட பின் அவர் இன்று வரை கைது செய்யப்படவில்லை. இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயல்” எனக் கூறினார்.

 

இந்நிலையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக கொல்கத்தாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி மெழுகுவர்த்தி பேரணியில் ஈடுபட்டார். பேரணிக்கு முன்னதாக அவர் பேசுகையில், ”டெல்லியில் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி காந்தி சிலை நோக்கு பேரணியாக செல்வோம் என கூறினார்.  சிறிது தூரம் வரை நடந்து சென்ற மம்தா பானர்ஜி பின்னர் தொண்டர் ஒருவரின் புல்லட் வண்டியில் தலைக்கவசம் அணிந்து கொண்டு சாலைப்பேரணியிலும் ஈடுபட்டார். பின் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், “மல்யுத்த வீரர் வீராங்கனைகள் நமது நாட்டின் பெருமை என்றும் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை எனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். ஜனநாயக ரீதியாக போராட்டங்களை மேற்கொள்ளுமாறு மல்யுத்த வீரர்களை கேட்டுக் கொண்ட மம்தா பானர்ஜி இந்த போராட்டம் மனிதாபிமான நீதிக்கானது என்றார். 

 

இதனிடையே டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் மல்யுத்த வீரர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு உறுதி செய்வது பேசப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அவர்களுக்கு பேச வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் நாடாளுமன்ற நிலைக்குழு  கூட்டத்தில் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Doctor explains Mamata Banerjee's health

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டு 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜி தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில் மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் இருந்து முகத்தின் வழியாக ரத்தம் வழியும் புகைப்படத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டது.

Doctor explains Mamata Banerjee's health

அந்த பதிவில், “மம்தா பானர்ஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தயவுசெய்து அவரை உங்களின் பிரார்த்தனை மூலம் நல்ல நிலைக்கு வர வையுங்கள்” எனப் பதிவிடப்பட்டிருந்தது. மம்தா பானர்ஜி கொல்கத்தா வூட்பர்ன் பிளாக்கில் உள்ள எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் மம்தா பானர்ஜிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலவேறு தலைவர்களும் தங்களது ஆறுதலை தெரிவித்துள்ளனர்.

Doctor explains Mamata Banerjee's health!

இந்நிலையில் எஸ்.எஸ்.கே.எம். மருத்துவமனையின் இயக்குநரும், மருத்துவருமான மணிமோய் பந்தோபாத்யாய் கூறும்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (14.03.2024) இரவு 07:30 மணியளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னால் இருந்து ஏற்பட்ட அதிர்வு காரணமாக வீட்டில் அவர் விழுந்த தடயம் உள்ளது. இதனால் அவரது பெருமூளை அதிர்ச்சி ஏற்பட்டு நெற்றியிலும் மூக்கிலும் கூர்மையான வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ஆரம்பத்தில் முதலில் மூளை மற்றும் நரம்பியல், மருந்தவியல் மற்றும் இதயவியல் ஆகிய துறையின் தலைமை மருத்துவர்கள் குழுவினரை கொண்டு, உடல் நிலை குறித்து பரிசோதித்து உறுதிபடுத்தப்பட்டது.

Doctor explains Mamata Banerjee's health!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய்

நெற்றியில் மூன்று தையல்கள் போடப்பட்டன. ஈ.சி.ஜி., சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மம்தா பானர்ஜி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அவர் வீட்டிற்கு செல்ல விரும்பினார். இதனால் அவரை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன் மருத்துவர் குழுவின் ஆலோசனையின்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படும். அவருக்கு நாளை (15.03.2024) மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப சிகிச்சை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார். 

Next Story

திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்; முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு வாய்ப்பு!

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Trinamool Congress Candidate List; Opportunity for former cricketer

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதே போன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் 39 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று (10.03.2024) வெளியிட்டார். இந்த 42  வேட்பாளர்களையும் ஒரே மேடையின் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்தார்.

அதன்படி கிருஷ்ணாநகர் தொகுதியில், எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஹூவா மொய்த்ரா போட்டியிடுகிறார். பஹ்ராம்பூர் தொகுதியில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் போட்டியிடுகிறார். மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹாசன்லால் தொகுதியில் சத்ருகன் சின்க்ஹா போட்டியிடுகிறார்.