Skip to main content

நள்ளிரவு 1 மணிக்கு கதவை தட்டிய சாமியார்: மடியில் அமர வைத்து...: கணவரும் உடந்தை என பெண் புகார்

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Sri Vidyahamsa Bharathi Swamiji




தனது கணவர் உடந்தையுடன் நள்ளிரவு ஒரு மணிக்கு வீட்டினுள் நுழைந்ததுடன், படுக்கை அறையில் தள்ளி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாகவும், தன்னை தாக்கி கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார் என்றும், பிரபல சாமியார் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகாரில் தன் கணவரை முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளார் அந்த பெண். 
 

கர்நாடக மாநிலம் மைசூர் ராம் மந்திர் மண்டபத்தில் ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி தங்கியுள்ளார். சதுர்மாஸ்ய விரதம் அனுசரிப்பதற்காக இங்கு தங்கியுள்ளார். செப்டம்பர் 24ம் தேதி இந்த விரதம் முடிவடைகிறது. இந்த நாட்களில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் ஆசி பெறுவதற்காக வருகின்றனர்.

தங்களது நிதி பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகளை சொல்லுகின்றனர். அவரிடம் தங்களது பிரச்சனைகளை சொன்னால் அதற்கான தீர்வுகள் கிடைக்கும் என பொதுமக்கள் வருவதாக அவரை சந்திப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
 

இந்த நிலையில் குவெம்ப்புநகர் காவல்நிலையத்தில், ராமகிருஷ்ணா நகரில் வசித்து வரும் கமலா என்ற பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ஸ்ரீ வித்யஹம்ச பாரதி சுவாமி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

அந்தப் புகாரில், எனக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகிறது. எனது கணவர் ராஜேஷ் இந்த சாமியாரின் பக்தர். என்னையும் அவரிடம் சென்று ஆசி பெறுமாறு அடிக்கடி கூறி வந்தார். நமக்கு உள்ள கடன் பிரச்சினைகளை சாமி தீர்த்து வைப்பார். செப்டம்பர் 3ஆம் தேதி நீ போய்ப் பார் என்று கூறி வந்தார்.

ஆனால் நான் செவி சாய்க்கவில்லை. பார்க்க போக மாட்டேன் என்று கூறி விட்டேன். இந்த நிலையில் செப்டம்பர் 4ம் தேதி அதிகாலை 1 மணி வேளையில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டில் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யாராக இருக்கும்? வெளியே சென்றிருந்த கணவர்தான் வந்து விட்டாரோ... என்று நினைத்து கதவைத் திறந்தேன். ஆனால் அங்கே சாமியார் நின்றிருந்ததை பார்த்ததும் கடும் அதிர்ச்சியடைந்தேன்.
 

சாமியாருடன் அவரது ஐந்து சீடர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் எனது கணவரும் வந்திருந்தார். சாமியார் வேகமாக வீட்டுக்குள் புகுந்தவர் என்னைத் தள்ளி விட்டார். என்னை சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார். எனது தனிப்பட்ட பாகங்களிலும் அவர் பலமாக தாக்கினார். அசிங்கமாக பேசினார், திட்டினார். கோவிலுக்கு வந்து என்னை பார்க்க முடியாதோ என்று கோபமாக கேட்டார்.
 

பிறகு என்னை படுக்கை அறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு வைத்து என்னை பலாத்காரம் செய்ய முயன்றார். மனிதாபிமானமே இல்லாமல் நடந்து கொண்டார். என் ஆடைகளை கலைத்து அதனை தீ வைத்து எரித்தார். நான் அப்போது நிர்வாணமாக நின்றேன். என்னைக் கொல்லவும் முயற்சித்தார். உதவிக்காக நான் வெளியே சென்று பக்கத்து வீடுகளுக்கு செல்லாம் என்று நினைத்தபோது தடுத்தனர்.


பிறகு என்னை வெளியே கூட்டிச் சென்ற அவர் ஒரு வாகனத்தில் என்னைக் கட்டாயப்படுத்தி ஏற்றினார். அவரும் ஏறிக் கொண்டார். என்னை அவரது கட்டாயப்படுத்தி அவரது மடியில் அமர வைத்தார். 3 நாட்களில் வந்து என்னைப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கொன்று விடுவேன் என்று சாமியார் மிரட்டியதாக புகாரில் கூறியுள்ளார்.


இந்த வழக்கில் பெண்ணின் கணவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.  
 

 

 



 

 

சார்ந்த செய்திகள்